சில ஊடகங்களில் வெளிவந்த உக்ரைன் அதிபர் பற்றிய கூற்றுக்கு...."நான் எங்கேயும் ஓடவில்லை": - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
#world_news
#Ukraine
#Russia
Mugunthan Mugunthan
3 years ago

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் இன்னும் தலைநகர் கீவில் இருப்பதாகவும் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் கூறி உள்ளார்.
அவர் வெளியிட்டு உள்ள பதிவில் "இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நான் எங்காவது ஓடிவிட்டேன் - உக்ரைனில் இருந்து, கீவில் இருந்து, என் அலுவலகத்திலிருந்து ஓடிவிட்டேன் என்ற தகவல் வெளிவருகிறது. நான் இங்கே என் இடத்தில் இருக்கிறேன், ஆண்ட்ரி போரிசோவிச்சில் இருக்கிறேன். யாரும் எங்கும் தப்பி ஓடவில்லை. இங்கே, நாங்கள் வேலை செய்கிறோம்," என்று ஜெலென்ஸ்கி கூறி உள்ளார்.
"எங்களுக்கு ஜாகிங் பிடிக்கும், ஆனால் இப்போது அதற்கு நேரமில்லை என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.



